Tuesday, March 15, 2011

சிலுவையில் இயேசுவை அடிக்கின்றனர் மதுரையில்...

அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்கும்
அமெரிக்கன் கல்லூரி போராட்டம்:
சீ...! தூ.......இவர்கள் கிறிஸ்துவர்களா?

மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கும் இரண்டு ஆண்டுகளாக பிரச்னை நிலவுகிறது. இரு தரப்பினரும் கோர்ட்டை அணுகுவதும், இதற்காக போராட்டம் என்ற பெயரில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது. தற்போது கல்லூரி நிர்வாகத்தை ஒரு தரப்பு பொறுப்பு ஏற்று அமைதியாக நடத்துவதாக கூறினாலும், மற்றொரு தரப்பு போராட்டம் என்ற பெயரில் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட வேண்டிய போலீசார், கல்லூரியில், இந்த நாடகங்களை வேடிக்கை பார்த்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று உண்ணாவிரதம், அதற்கு எதிராக அரசியல்கட்சிகள் பாணியில் நடத்தப்பட்ட உண்ணும் விரதம் போராட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு, ரோட்டுக்கு வந்தது. இதனால் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுஜனம்தான்.

நகரின் பிரதான அழகர்கோயில் ரோட்டில் மறியல் மற்றும் மோதல் நடந்ததால், வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இதனால் சிம்மக்கல் பகுதியில் இருந்த சென்ற வாகனங்கள், மாட்டுத்தாவணி, அழகர்கோவில் செல்ல முடியாமல், யானைக்கல் வரை அணிவகுத்து நின்றன. மாட்டுத்தாவணி, புதூர் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள், அவுட் போஸ்ட் வரை அணிவகுத்து நின்றன. போதிய போலீசார் இல்லாததால், அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனகல் ரோடு, காந்தி மியூசியம் ரோடு, தங்கராஜ் சாலை ரோடு, நரிமேடு ரோடு, செல்லூர் மெயின் ரோடு, கோகலே ரோடு என அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசர காரியங்களுக்காக சென்றவர்கள், அலுவலகம் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட நினைப்பவர்கள்,முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு முன் சென்று 
போராட கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment