Saturday, March 12, 2011

திருநெல்வேலி

திருநெல்வேலி:
சட்டசபைத்தேர்தலில் 43 தொகுதிகளில் தனித்துப்போட்டியிடவிருப்பதாக அழகுமுத்துக்கோன் பேரவை அறிவித்துள்ளது.அழகுமுத்துக்கோன் பேரவை நிறுவனர் சுடர்ஒளி முருகன் அறிக்கை:தமிழகத்தில் யாதவர் சமூகத்தை சேர்ந்த 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 43 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். யாதவ சமுதாயத்திற்கு எந்த கட்சியும் அங்கீகாரம் வழங்கவில்லை.தேர்தலில் வெற்றியை நிர்ண யிக்கும் சக்தியாக யாதவ மக்கள் உள்ளனர்.யாதவ சமுதாய மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு அழகுமுத்துக் கோன் பேரவை. இப்பேரவைக்கு 14 ஆயிரம் நிர்வாகிகள் உள்ளனர். 7 ஆயிரத்து 524 இளைஞர் மன்றங்கள், 318 விவசாய சங்கங்கள் உள்ளன. சட்டசபைத்தேர்தலில் 43 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள் ளோம்.அழகுமுத்துக்கோன் வரலாற்றை பள்ளிப்பாடத்தில் சேர்ப்பது, பால் வளத்துறை அமைச்சராக யாதவர் சமு தாயத்தினரை நியமிப்பது, மதுவிலக்கை அமல்படுத்துவது, புதிய தொழிற்சாலைகள் துவக்குவது, ரேஷன் கடை களில் பொருட்களை சரியான எடையில் வழங்குவது, பீடித்தொழிலாளர்களுக்கு மாற்றுத்தொழில் அளிப்பது குறித்து தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வோம். அனைத்து சமுதாய மக்கள் ஆதரவையும் திரட்டுவோம்.

No comments:

Post a Comment