Friday, February 25, 2011

ஒரு புத்தகத்தின் கதை.

ஒரு புத்தகத்தின் கதை. 

ஒரு நாள், நான் அன்னபூர்ணா என்ற மருந்தகத்தில் உட்கார்ந்து
மருந்து வாங்குபவர்களையும் விற்பவர்களையும்  பார்த்துக் கொண்டிருந்தேன்.
சுமார் ஐயாயிரம் நோய்களுக்கு மேலாக மருத்துவ உலகம் பெயரிட்டிருப்பது எனக்குத் தெரிந்தது.
ஆனால், ஐநூறு வகையான மருந்துகள் கூட இவர்களிடம் இல்லை.
WHO- உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில்-
கிட்டத்தட்ட 38 நோய்களுக்கு மருந்தே இல்லை என்றும்,
சில நோய்களுக்கு மருந்து இருப்பதாக சொன்னால்,
அது சட்டப் படி குற்றம் என்றும் சொல்லியுள்ளது.
 
ஆய்வுகளும், கொள்கைகளும் எப்பொழுதும் மாற்றத்திற்கு உரியவை.
ஒரு காலத்தில் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப் பட்ட பாராசிடமால் இப்பொழுது அநேக நாடுகளில் தடை செய்யப்பட ஓன்று.
ஆர்தரிடிஸ் என்ற வலிக்கான - நோய்க்கான ஒரு மருந்து
இதய நோயைக் கொண்டுவரும் காரணியாக இருந்ததால்,
தற்பொழுது அது தடை செய்யப் பட்டுள்ளது.
கொலேஸ்ட்ரால் கட்டுப் பட LIPITAR என்ற மருந்து
கொடுக்கப் படுகின்றது. இதனைத் தொடர்ந்து எடுப்பதால்,
கல்லீரல் பாதிக்கப் படுகின்றது. அதன் பக்கவிளைவப் பார்த்தால்
மருந்தா அல்லது விஷமா என்று கேள்வி எழும்புகின்றது.
ippadith  தொடர் கேள்விகள் எழுந்ததால், உண்மையில் மருந்து எங்கு உள்ளது? என்று சிந்திக்கலானேன்.
சில நாட்களில் பதிலும் கிடைத்தது."மருந்தென யாக்கைக்கு வேண்டாம்"(இந்த உடம்புக்கு மருந்து என்று ஓன்று வேண்டாம்
என்று அய்யன் திருவள்ளுவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
 
இறைவனிடம் கேட்டேன்- பதில், மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு மருந்து - அது குரு மருந்து- அது திரு மருந்து என்று அந்தப் பதிலில் இருந்தது.எனது குருவிடம் சென்று கேட்டேன்....ஆமாம் குரு மருந்து என்னிடம் உள்ளது- அதனைக் கொண்டு எல்லாவியாதிகளயும் குணப்படுத்தலாம் என்று சொன்னார்.
சொன்னவர் சீக்கிரத்தில் செத்தும் போனார். மீண்டும் இறைவனிடம் கேட்டேன். " குருமருந்து -அது இறைமருந்து" என்று பதில் வந்தது.
 
அப்படி என்றால் எங்கே இருக்கின்றது என்று மீண்டும் மீண்டும் கேட்டேன்."உனக்குள்ளேயே கொடுக்கப் பட்டிருக்கின்றது"
என்ற பதிலால் மகிழ்ச்சி அடைந்தேன்.
அதனைக் கண்டு விளங்கிக் கொண்டபோதோ - 
இதற்காகத்தானா ஆசைப் பட்டாய் இராஜசேகரா?
 
என்று மனம் துள்ளியது..........அதன் விளைவாக நான் எழுத முற்பட்ட புத்தகம்தான் "Anatomy of spirit"--
"ARISE & SHINE"
Dr.Rajasekar Athiappan,M.D.,(Ayur) M.D.,(Acu.)
Member of Canadian Physiotherapy Association
 
நன்றி - sidhahealer .blogspot

No comments:

Post a Comment