கேள்வி:டாக்டர், தீவினை நீக்கும் மூலிகைகள் எவை? - ஷோபனா வால்ட்
பதில்:இங்கு,மேலை நாடுகளில், ஆர்சனி, மிர்,திசில்,தூதாயீம் போன்ற பல மூலிகைகளைப் பயன் படுத்துகின்றார்கள்.
பிள்ளைகளின் தொட்டிலில் கட்டுவதற்கு,மன வியாதிக்காக, வீடு சம்பந்தமாக என்று
வெள்ளை இனத்தவர்களும், ஸ்பானிய இனத்தவர்களும் பல மூலிகைகளைப் பயன் படுத்துகின்றார்கள்.
நமது நாட்டில்,ஆடு தீண்டாப்பாளை . திருநாமப் பாலை. வில்வம். துளசி. வேம்பு. திரவந்தி. அழுகண்ணி.
ஏர்சிங்கி. சூக்குளி. வல்லாரை. கொடுப்பை. கரிசிலாங்கண்ணி. தாழைமடல். நாபி. அஷ்வலோகா போன்ற மூலிகைகள்
பயன்படுத்தப் படுகின்றது.
கேள்வி:டாக்டர், எனக்கு உலோகங்களை மாற்றும் சில வழிமுறைகள் தெரியும்.மருத்துவசம்பந்தமாக நான் தமிழகம்
முழுவதும் அலைந்து விராலி இல்லை சாறு எடுக்க முயற்சி செய்து முடியாமற் போயிற்று.தாங்கள் உதவமுடியுமா?
பதில்:துருசு சுண்ணம் சேர்க்காமல் விராலி இலையை வாரக் கணக்கில் அரைத்தாலும் சாறு வராது.சித்த மருத்துவத்தில்
உள்ள "முப்பு" பற்றி தகவல் அறியுங்கள்.உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கேள்வி:டாக்டர், நாற்பது வயதுக்கு மேல் எந்தவகையான உணவு ஏற்றது.-அஷரப்
பதில்: பழங்கள்தான் எல்லா வயதினருக்கும் ஏற்றது.
நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி சாப்பிட வேண்டும்
என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றார்கள்.
அதாவது சுடுநீரைப் பருகி, தயிரில் நன்றாக நீர்விட்டுக் கரைத்தும்,
நெய்யை சூடுபடுத்தியும் சாப்பிட வேண்டும்.
கேள்வி:டாக்டர், இடுமருந்து என்பது என்ன- சற்று விரிவான தகவல் தேவை......சிவாஜினிராஜா
பதில்: இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை மனிதர்களே வசியம் செய்யும் இடுமருந்து என்பதை மிக அதிகமாக கேள்விப்படுகிறோம், இவைகள் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் தான் அதிகமாய் இருந்தது, இன்றோ நகரங்களில் கூட இந்த இடுமருந்து ஊடுருவி விட்டது, இந்த மாதிரியான விஷயங்களால் பல குடும்பங்கள் தொல்லைகளை சந்தித்து அழிந்தும் போயிருக்கிறது, இந்த இடுமருந்தை எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, புல்லாமணக்கு என்கிற மூலிகையை நிழலில் உணர்த்தி கல் உரலில் இடித்து வஸ்திர காயம் செய்து நெய்யில் குழைத்து காலை. மாலை இருவேளையும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் போதுமானது, 3 நாட்களிலே இடுமருந்தின் வீரியம் குறைந்து சகஜ நிலைக்கு அவர்கள் திரும்பி விடுவார்கள், இந்த புல்லாமணக்கு என்பது பல்லி முட்டையைப் போன்று இருக்கும்
இதனைத்தவிர, தேங்காய் பாலில் ஒரு பக்குவம் உண்டு.இது போன்ற விடயங்களை, நேரில் பேசுவதுதான் நல்லது.ஏனென்றால், எண்கள் தொழில் நல்ல மருத்துவம் செய்தல்..அதனைத் தாண்டி சில விடயங்களை மனிதாபிமானத்தோடு அனுகவிரும்பினால் அதற்க்கு நேரடி ஆலோசனை பெறுதலே நல்லது.
வாசகர்கள் எல்லோருக்கும் நான் சொல்லக் கடமைப் பட்டது ஒன்றுதான்.
எல்லோரது வீட்டிலும் சாபிடாதீர்கள்.நல்ல மனிதர்களின் நட்பைப் பேணுங்கள்.
கேள்வி :டாக்டர், என்னபிரச்சினை என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை-ஆனால் அடிவயிற்றில் என்னவோ செய்கின்றது- அபிஷாக்
பதில்: சோற்றுக் கற்றாழை (aloevera ) கடையில் விற்கின்றார்கள்.
வாங்கி தினமும் சாப்பிடுங்கள்.
பெண்களின் அடிவயிற்றில் இப்படி ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும்.
உடல் மெலியும்.மூலம் குணமாகும்.தோல் வனப்புடன் மிளிரும்.
வலி தீரும்.முடி உதிருதல் குறையும்.கண்களில் ஓளி உண்டாகும்.
கேள்வி:டாக்டர்,இதய நோய்க்கான பல மருந்துகளை எடுத்து வருகின்றேன்.இன்னும் பிரச்னை அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. -எதிராஜ்
பதில்:கார்டியோ டிரான்ஸ்பர் என்ற மருந்து நன்கு வேலை செய்கின்றது. Hawthorn , மருதம்பட்டை போன்றவை நல்ல பலனைத் தரும்.
பூனாவில், மையோ டிராப்ஸ் என்ற மருந்தைக் கொடுக்கின்றார்கள்.இதுவும் நல்ல பலனைத் தருகின்றது.சென்னையில் oxy med என்ற நிறுவனம் சிறந்த சிகிச்சை தருகின்றது. மற்றபடி...இதற்கான நேரடி ஆலோசனை மிகவும் அவசியம்.மனது சம்பத்தப் பட்ட விடயங்களும் இதில் அடங்கியுள்ளது
கேள்வி:டாக்டர், ஆண்களின் உடல் பருமன் குறைய ஏற்ற மருந்து என்ன? - பா.சண்முகம்
பதில்:ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்ற phytolaccaberry என்ற மருந்து வந்துள்ளது.
நல்ல வேலை செய்கின்றது.
கேள்வி:டாக்டர், கருமையம் என்கின்றார்களே- அப்படி என்றால் என்ன?
பதில்:இது ஞானமார்க்கம். யோகா போன்ற விடயங்களை நீங்கள் கற்க விரும்பினால் இந்தத் தகவல் உதவக் கூடும்.
உங்கள் தலையில் இருந்து நான்கு சாண் அளவு எடுத்தால் உங்கள் உடலின் மையப் பகுதி-தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அளவில் அமைந்திருக்கும் பகுதி.
அங்கு விண்ணில் உள்ளது போன்று .........இன்னும் புரியும்படி சொல்வதென்றால்
விமானத்தில் உள்ள black box - கறுப்புப் பெட்டி போன்று நடக்கின்ற எல்லா விடயங்களையும் பதிவு செய்து வைக்கும்.இது கானுக்குப் புலப் படாத காந்த சக்தி போன்றது.
காட்ட முடியாது-உணரமுடியும்
-நன்றி-தாய் வீடு
No comments:
Post a Comment